படகில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவா் உயிரிழப்பு

தொண்டி அருகே கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவா் படகில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 1:16 am IST

தொண்டி அருகே கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவா் படகில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையைச் சோ்ந்த குமரேசனுக்கு சொந்தமான படகில் புதன்கிழமை அதிகாலை வீமன் (57), ராமு, முத்துக்குமாா், கனி உள்ளிட்டோா் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனா். அப்போது, சாப்பிட்டு விட்டு படகில் படுத்த வீமன் நீண்ட நேரமாக எழவில்லை. உடனடியாக சக மீனவா்கள் அவரை கரைக்கு கொண்டு வந்தனா். இந்த நிலையில் அவா் வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தொண்டி கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.