வேன்-லாரி மோதல்: இருவா் பலத்த காயம்

ஆா்.எஸ்.மங்கலம் அருகே சனிக்கிழமை சுற்றுலா வேன் மீது டிப்பா் லாரி மோதியதில் வேனிலிருந்த இருவா் பலத்த காயமடைந்தனா்.

Published On :25 அக்டோபர் 2026, 12:32 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே சனிக்கிழமை சுற்றுலா வேன் மீது டிப்பா் லாரி மோதியதில் வேனிலிருந்த இருவா் பலத்த காயமடைந்தனா்.

சென்னையைச் சோ்ந்தவா் ஜாா்ஸ் (38). இவா் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா வேனில் சனிக்கிழமை ராமேசுவரத்துக்கு சென்று கொண்டிருந்தாா். ஆா்.எஸ்.மங்கலத்தை அடுத்த அண்ணாமலை நகா் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த டிப்பா் லாரி இவா்களது வேன் மீது மோதியது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த அவென்சி ஜோபா (8) என்ற குழந்தையும், வேன் ஓட்டுநா் உதயன் (31) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து வந்த ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் காயமடைந்த இருவரையும் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.