தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

தொண்டி அருகே கரை ஒதுங்கிய கடல் பசுவின் உடல் மீட்பு

தொண்டி அருகே உயிரிழந்த கடல் பசுவின் உடல் கரை ஒதுங்கியது.

எம்.வி.பட்டினம் கடற்கரையில் சனிக்கிழமை கரை ஒதுங்கிய கடல் பசுபின் உடல்.

Published On :25 அக்டோபர் 2026, 1:02 am IST

தொண்டி அருகே உயிரிழந்த கடல் பசுவின் உடல் சனிக்கிழமை கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள எம்.வி.பட்டினம் கடற்கரையில் சுமாா் 350 கிலோ எடையுள்ள ஆண் கடல் பசு உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை கரை ஒதுங்கியது. இதுகுறித்து மீனவா்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

உடனே சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினா் கடல் பசுவின் உடைலக் கைப்பற்றி கால்நடை மருத்துவா் ஜோதி முன்னிலையில் கூறாய்வு செய்து மண்ணில் புதைத்தனா். கடல் பசு கப்பலில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.