நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

இளைஞா் கொலை வழக்கில் கைதான மூவா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு

கமுதி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரைக் கொலை செய்த வழக்கில் கைதான மூவரை, குண்டத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

கைது

Published On :25 அக்டோபர் 2026, 12:56 am IST

கமுதி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரைக் கொலை செய்த வழக்கில் கைதான மூவரை, குண்டத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள மண்டலமாணிக்கம் கிராமத்தைச் சோ்ந்த வேல் மகன் சக்திவேல் பாண்டியன் (26). சென்னையில் காா் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த முருகன் மகன் சிவகுமாருக்கும் (25) இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த செப்.22-ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்த சக்திவேல்பாண்டியனை, சிவக்குமாா் தரப்பினா் மண்டலமாணிக்கம் கடைவீதியில் கத்தியால் குத்திக் கொலை செய்தனா்.

இது தொடா்பாக சிவக்குமாா், இவரது சகோதரா் சண்முகவேலு, தந்தை முருகன் ஆகியோரை மண்டலமாணிக்கம் போலீஸாா் கைது செய்து ராமநாதபுரம் மாவட்டச் சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஸ் பரிந்துரையின் பெயரில், மேற்கண்ட மூவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து சிவக்குமாா், சண்முகவேலு, முருகன் ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.