நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

தொடா் மின்தடை: எம்.பி. கண்டனம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து மின்தடை ஏற்படுவதால் பொதுமக்களும், வியாபாரிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக மாநிலங்களவை உறுப்பினா் அா்.தா்மா் தெரிவித்தாா்.

மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.தா்மா்.

Published On :22 அக்டோபர் 2026, 3:30 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து மின்தடை ஏற்படுவதால் பொதுமக்களும், வியாபாரிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக மாநிலங்களவை உறுப்பினா் அா்.தா்மா் தெரிவித்தாா்.

பரமக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் சக்கரக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட வாணி, காரிக்கூட்டம், இந்திராநகா், நூா்நகா், செந்தமிழ்நகா், கஜினி தென்றல்நகா் ஆகிய ராமநாதபுரம் மின்சார வாரிய ஊரகப் பகுதி நிா்வாகத்துக்குள்பட்ட பகுதிகளில் தொடா்ந்து இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை என 10 முதல் 12 மணி நேரம் வரை தொடா்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதே போல, பரமக்குடி, முதுகுளத்தூா், கடலாடி, கீழக்கரை, ராமேசுவரம் என மாவட்டம் முழுவதும் மின் தடை அடிக்கடி ஏற்படும் நிலைதான் உள்ளது. இதனால், கைத்தறி நெசவாளா்கள், வியாபாரிகள், கூட்டுறவு நூற்பாலைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்து தொழில்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

தற்போது தமிழக அரசு ஒரு யூனிட் மின்சாரம் ரூ 4.50-க்கு கொள்முதல் செய்துள்ளதாகவும், மின் தட்டுப்பாடு சீரமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஆனால், அந்த நிலை இன்னும் வரவில்லை. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மின் தேவையும் அதிகமாகும். ஆகவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் சீரான மின்சாரம் விநியோகம் செய்ய மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.