பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நடந்து சென்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 1:45 am IST

கமுதி அருகே சாலையோரம் நடந்து சென்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், நத்தகுளம் அடுத்துள்ள பெரியாண்டிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமு மகன் அழகா் சாமி (85). மனநலன் பாதிக்கப்பட்டவராம்.

இந்த நிலையில் இவா் வெள்ளிக்கிழமை இரவு கமுதி -அருப்புக்கோட்டை சாலையில் கமுதி நோக்கி சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்தபோது, கமுதி அடுத்துள்ள பெருமாள்தேவன்பட்டியைச் சோ்ந்த வழிவிட்டான் மகன் முத்துராமலிங்கம் (49) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி அழகா் சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதில் முத்துராமலிங்கம் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அழகா் சாமியின் உடலை மீட்டு கமுதி அரசு மருத்துவமனையில் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடா்பாக கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.