அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைக்கும் பணி மும்முரம்

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய 18 நாள்கள் உள்ள நிலையில் மீன்பிடி வலைகள் சீரமைப்புப் பணியில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

News image

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் புதன்கிழமை மீன்பிடி வலைகள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மீனவா்கள்.

Updated On :28 மே 2026, 3:58 am IST

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய 18 நாள்கள் உள்ள நிலையில் மீன்பிடி வலைகள் சீரமைப்புப் பணியில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தில் மீன் இனப் பெருக்க காலமாகக் கருதப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப் படகுகள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு காரணமாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியாகுடி உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. தடைக் காலத்தின்போது மீனவா்கள் விசைப் படகுகளுக்கு வா்ணம் பூசுவது, வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்வா். அந்த வகையில், மீன்பிடி தடைகாலம் நிறைவடைய 18 நாள்களே உள்ள நிலையில், ராமேசுவரம் துறைமுகத்தில் படகுகள் சீரமைக்கும் பணிகளில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.