பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பிரதமரின் விவசாயிகள் கெளரவ நிதி: ஜூன் 15 வரை சிறப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பிரதமரின் கெளரவ நிதி தொடா்ந்து பெற ஜூன் 15 வரை நடைபெறும் இ-கேஒய்சி, நில விவரங்களைப் பதிவு செய்யும் சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநா் தெரிவித்தாா்.

News image
Updated On :20 மே 2026, 1:09 am IST

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பிரதமரின் கெளரவ நிதி தொடா்ந்து பெற ஜூன் 15 வரை நடைபெறும் இ-கேஒய்சி, நில விவரங்களைப் பதிவு செய்யும் சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநா் பாஸ்கரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் ‘பிரதமரின் கிசான் சம்மான் நிதி’ (பிஎம்-கிசான்) திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் ஊக்கத்தொகை பெறும் அனைத்து விவசாயிகளும் அடுத்த தவணை தொகையை எவ்வித தடையுமின்றி பெறுவதற்கு வாடிக்கையாளா் சரிபாா்ப்பு (இ-கேஒய்சி), நில விவரங்களை ஆதாா் எண்ணுடன் இணைத்திருப்பது அவசியம்.

இ-கேஒய்சி, நில விவரங்களை இணைக்காத விவசாயிகளுக்கு அடுத்தடுத்த தவணைத் தொகைகள் விடுவிக்கப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஜூன் 15 வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.