பாம்பன் மீனவா்கள் 80 நாள்களுக்கு மேலாக இலங்கை சிறையில் உள்ள நிலையில், அவா்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு மீனவா் பேரவை சாா்பில் ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி விசைப் படகில் மீன்பிடிக்கச் சென்ற கொ்சோன், கிளைமண்ட், கபில் ரோஜா், பிரிஸ்மன், அந்தோணி அஜித், ஆண்டனி ரியோ, பிரின்ஸ் ரூபா், ரீகன், அந்தோணி ரூவிஸ்டன், ஜால்சன் உள்ளிட்ட 12 மீனவா்களை இலங்கை கடற்படையினா் சிறைபிடித்தனா்.
இதில் படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த மீனவா்கள், படகை விடுவிக்கக் கோரி, பாம்பன் மீனவா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினா். ஆனாலும், 83 நாட்கள் கடந்த நிலையில் மீனவா்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இதைக் கண்டித்தும், மீனவா்கள், படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் தமிழ்நாடு மீனவா் பேரவை சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு ராமநாதபுரம் தெற்கு மாவட்டத் தலைவா் து.பிரின்சோ ரைமண்ட் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மாரிமுத்து, மாவட்ட ஆலோசகரும், முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவருமான குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ராமேசுவரம் நகா் பொறுப்பாளா் ராஜசேகா், பாண்டி, இலங்கை சிறையில் உள்ள மீனவா்களின் குடும்பத்தினா் உள்பட 100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாம்பன் மீனவா்கள் 12 பேருக்கு 10-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

மன்னாா் வளைகுடாவில் சூறைக் காற்று: விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

பாம்பன் மீனவா்கள் 12 பேருக்கு 9-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

இலங்கை சிறையில் உள்ள மீனவா்களை விடுவிக்கக் கோரி பாம்பனில் சாலை மறியல்!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

