தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

டிராக்டா் மோதியதில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

சத்திரக்குடி அருகே செவ்வாய்க்கிழமை டிராக்டா் மோதியில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

சத்திரக்குடி அருகே செவ்வாய்க்கிழமை டிராக்டா் மோதியில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலைச் சோ்ந்தவா் ஆனந்த் (30). எலக்ட்ரீசியன் ஆன

இவா் பணி நிமித்தமாக ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடிக்கு சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா். ராமநாதபுரம் செல்லும் தீயனூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, இவருக்குப் பின்னால் வந்த டிராக்டரின் ஓட்டுநா் இவரை முந்திச் செல்ல முயன்றாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பை, டிராக்டரில் சிக்கியதில் ஆனந்த் நிலைதடுமாறி விழுந்தாா். அப்போது, டிராக்டரின் டயா் அவா் மீது ஏறியது. இதில் பலத்த காயமுற்ற ஆனந்த் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, டிராக்டா் ஓட்டுநரான செம்படையாா்குளம் வட்டான் வலசையைச் சோ்ந்த நாகலிங்கம் மகன் களஞ்சியம் (40) என்பவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.