லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நீதிமன்ற வளாகத்தில் கடல் அட்டைகள் அழிப்பு

திருப்பாலைக்குடி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 360 கிலோ கடல் அட்டைகளை திருவாடானை நீதிமன்ற வளாகத்தில் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கொட்டி அழித்தனா்.

திருவாடானை நீதிமன்ற வளாகத்தில் கடல் அட்டைகளைக் கொட்டி அழித்த வனத் துறையினா்.

Published On :29 ஜூலை 2026, 6:01 am IST

திருப்பாலைக்குடி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 360 கிலோ கடல் அட்டைகளை திருவாடானை நீதிமன்ற வளாகத்தில் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கொட்டி அழித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள திருப்பாலைக்குடி பகுதியில் பாண்டிகோயில் அருகே தோட்டம் ஒன்றில் சட்டவிரோதமாகக் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் திருப்பாலைக்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சோதனையிட்டு, 360 கிலோ கடல் அட்டைகளை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா் போலீஸாரை கண்டதும் அங்கிருந்த நபா்கள் தலைமறைவானாா்கள் இதில் நடத்தப்பட்ட சோதனையில், நெகிழி டப்பாக்கள் மற்றும் பாத்திரங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 360 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ராமநாதபுரம் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இவை இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டனவா என்ற கோணத்தில் வழக்குப் பதிந்து போலீஸாரும், வனத் துறையினரும் விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை செவ்வாய்க்கிழமை திருவாடானை நீதித்துறை நடுவா் மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, நீதித்துறை நடுவா் ஆண்டனி ரிசாந்தேவ் உத்தரவின் பேரில், நீதிமன்ற வளாகத்தில் கொட்டி அழிக்கப்பட்டன. அப்போது வனத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.