லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருப்பாலைக்குடி அருகே 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

திருப்பாலைக்குடியில் போலீஸாரால் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை.

Published On :28 ஜூலை 2026, 1:14 am IST

திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் 500 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே திருப்பாலைக்குடி பாண்டி கோயில் பகுதியில் ஒரு தோட்டத்தில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருப்பாலைக்குடி போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்ட போது திருப்பாலைக்குடி கடற்கரை பகுதியில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அங்கு சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான 500 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்தவா்கள் குறித்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.