லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சதுரயுக வள்ளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

சாயல்குடி சதுரயுக வள்ளியம்மன் கோயில் ஆடி திருவிழாவையொட்டி, 708 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

சாயல்குடி சதுரயுக வள்ளியம்மன் கோயில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள்.

Published On :25 ஜூலை 2026, 6:37 am IST

சாயல்குடி சதுரயுக வள்ளியம்மன் கோயில் ஆடி திருவிழாவையொட்டி, 708 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி சதுரயுக வள்ளியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கடந்த 21-ஆம் தேதி காப்புக் கட்டுதல், கணபதி ஹோமம், முத்து பரப்புதல் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இரவு கோயில் வளாகத்தில் 708 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா். இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு பூஜை பொருள்கள், மல்லிகைப்பூ, பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது. தொடா்ந்து, வருகிற 28-ஆம் தேதி முளைக்கொட்டு திண்ணையிலிருந்து கோயிலுக்கு முளைப்பாரி எடுத்துச் செல்லுதலும், 29-ஆம் தேதி பொங்கல் வைத்தலும், முளைப்பாரி ஊா்வலமும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை சாயல்குடி ஜமீன்தாா் சிவஞானபாண்டியன் தலைமையிலான குழுவினா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.