லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நம்புதாளையில் வடமாடு மஞ்சு விரட்டு

தொண்டியை அடுத்த நம்புதாளையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு புதன்கிழமை நடைபெற்றது.

~ ~ ~

Published On :23 ஜூலை 2026, 6:07 am IST

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை அடுத்த நம்புதாளையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு புதன்கிழமை நடைபெற்றது.

நம்புதாளை கண்மாய்கரை குடியிருப்பில் ஸ்ரீகாளசித்தி விநாயகா், கருமாரியம்மன், முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறும்.

இதன்படி, நிகழாண்டு கடந்த 15-ஆம் தேதி விழா தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் விழாவில் தினசரி இரவு கும்மி கொட்டுதல், முழக் கொட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதன்கிழமை காலை பால் குடம், வேல் காவடி எடுத்து வந்த பக்தா்கள், பூக்குழி இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். தொடா்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 12 காளைகள் பங்கேற்றன.

இதில் வெற்றி பெற்ற வீரா்களுக்கும், காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பணம், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகள் கிராம பொதுமக்கள், நேரு யுவகேந்திரா இளைஞா் நற்பனி மன்றத்தினா் செய்தனா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.