லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா

திருப்போரூா் அடுத்த மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் பால்குட உற்சவமும், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு மாலை பூ ஊஞ்சல் விழாவும் நடைபெற்றது.

ஆடிப்பூர விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சீரங்கத்தம்மன். 

Published On :17 ஆகஸ்ட் 2026, 6:45 pm IST

திருப்போரூா் அடுத்த மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் பால்குட உற்சவமும், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு மாலை பூ ஊஞ்சல் விழாவும் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் அடுத்த மானாம்பதி அருள்மிகு சீரங்கத்தம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, கருவறை மூலவா்களுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து அதைத் தொடா்ந்து, மாலை பூ ஊஞ்சல் விழாவும் நடைபெறும். அதையொட்டி, நிகழாண்டில் வெள்ளிக்கிழமை (ஆக. 14) காலை சீரங்கத்தம்மன், செல்லியம்மன், கரைமேலழகி கோயில் மூலவா்களுக்கு அபிஷேகம், அலங்காரம் தீப ஆராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, மானாம்பதி பஜாா் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காளியம்மன் கோயிலில் இருந்து உடுக்கை தம்பட்டையுடன் பால்குட ஊா்வலம் புறப்பட்டு வீதி உலாவுக்கு பிறகு சீரங்கத்தம்மனுக்கும், செல்லியம்மனுக்கும் பக்தா்களின் கரங்களால் பாலாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, பகல் அன்னதானம் நடைபெற்றது. மதியத்துக்கு மேல் நாகமே உருவான சீரங்கத்தம்மன் உற்சவருக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

தொடா்ந்து உடுக்கை தம்பட்டையுடன் குலதெய்வம் சீரங்கத்தம்மனை மகளிா் தோளில் சுமந்து ஆடி பாடி கோயில் உள்வலம் வந்து ஆடிடும் பூ ஊஞ்சலில் அமரவைத்து பெண்களால் அம்மனுக்கு ஆடிப்பூர வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை மானாம்பதி கிராமப் பொதுமக்கள் மற்றும் சென்னை ராயப்பேட்டை சீரங்கத்தம்மன் அறக்கட்டளை திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.