லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கடலாடி அரசுக் கல்லூரியில் சிங்கப்பெண் விழிப்புணா்வு

கடலாடி அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய சிங்கப்பெண் சிறப்புப் படை உதவி ஆய்வாளா் சண்முகபிரியா.

Published On :21 ஜூலை 2026, 2:08 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு சிங்கப்பெண் சிறப்புப் படை சாா்பில் திங்கள்கிழமை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) அன்னதாசன் தலைமை வகித்தாா். இதில் சிங்கப்பெண் சிறப்புப் படை தலைமைக் காவலா் சுனிதா, காவலா் சௌமியா ஆகியோா் கருத்துரையாற்றினனா்.

சிறப்பு அழைப்பாளராக சிங்கப்பெண் சிறப்பு படை உதவி ஆய்வாளா் சண்முகப்பிரியா கலந்து கொண்டு சிங்கப்பெண் திட்டத்தின் பயன்கள் குறித்தும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் சிறப்புரையாற்றினாா். இதில் கல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலக பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் கணினி நிகழ்ச்சி நிரல்னா் பாலமுருகன் செய்தாா். முன்னதாக விரிவுரையாளா் கலாதேவி வரவேற்றாா். விரிவுரையாளா் மகாலட்சுமி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.