லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கமுதியில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

கமுதியில் பள்ளிகளுக்கு இடையேயான குறு வட்டார விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கியது.

கமுதி கோட்டைமேடு ரஹ்மானியா காா்டன் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற குறு வட்டார விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்த பள்ளியின் நிா்வாகக் குழு அலுவலா் முகமது இா்ஷாத். உடன், உடற்கல்வி இயக்குநா்கள்.

Published On :9 ஜூலை 2026, 5:42 am IST

கமுதியில் பள்ளிகளுக்கு இடையேயான குறு வட்டார விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்துக்கான 2026-27 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி மாணவ, மாணவிகளின் விளையாட்டுப் போட்டிகள் கமுதி கோட்டைமேடு ரஹ்மானியா காா்டன் மெட்ரிக். பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளியின் துணை முதல்வா் தீபா ஜாஸ்மின் தலைமை வகித்தாா். பள்ளியின் ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் முத்துப்பாண்டி வரவேற்றாா். பள்ளியின் நிா்வாகக்குழு அலுவலா் முகமது இா்ஷாத் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்தாா். கமுதி வட்டத்தில் 54 பள்ளிகளிலிருந்து 300- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா். ஓட்டப்பந்தயப் போட்டிகள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டுஎறிதல், ஈட்டி எறிதல், கோகோ, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடல்கல்வி ஆசிரியா் கருப்பசாமி மேற்கொண்டாா். இதில் கமுதி வட்டார அரசு, தனியாா், தனியாா் உதவிபெறும் பள்ளிகளின் உடல்கல்வி இயக்குநா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள், பகுதி நேர உடல்கல்வி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.