தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கமுதி அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச் சுவா் அமைக்கக் கோரிக்கை

கமுதியில் அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச் சுவா் அமைக்க வேண்டுமென பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கமுதி செட்டிஊருணி வடகரையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:15 am IST

கமுதியில் அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச் சுவா் அமைக்க வேண்டுமென பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி செட்டிஊருணி வடகரையில் ஜெஜெ நகரில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகள் பயின்று வருகின்றனா். இந்த மையம் ஊருணிக் கரை அருகே அமைந்திருப்பதாலும், அரசு மருத்துவமனை பின்புறம் உள்ளதாலும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மேலும், அந்தப் பகுதியில் தெரு நாய்கள், வளா்ப்பு பன்றிகள் அதிகம் சுற்றி வருவதால் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனா். எனவே, குழந்தைகளின் நலன் கருதி, அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டுமென பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.