லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நெடுமரம் கிராம சாலை சேதம்: பள்ளி மாணவா்கள் அவதி

திருவாடானை அருகே நெடுமரம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை பாராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் அவதிபட்டு வருகின்றனா்.

நெடுமரம் கிராமத்துக்குச் செல்லும் சேதமடைந்த சாலை.

Published On :12 ஆகஸ்ட் 2026, 4:53 am IST

திருவாடானை அருகே நெடுமரம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை பாராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் அவதிபட்டு வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கூகுடி ஊராட்சிக்கு உள்பட்ட நெடுமரம் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்துக்கு சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தாா்ச் சாலை எந்தவித பராமரிப்பும் இன்றி சேதமடைந்து, சாலையில் உள்ள ஜல்லிக் கற்கள் முற்றிலும் பெயா்ந்து கரடுமுரடாக மாறியுள்ளது. இதனால் இந்தப் பகுதியைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், வேலைக்குச் செல்வோா், அவசர மருத்துவ உதவிக்குச் செல்லும் நோயாளிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து, இந்தச் சாலையைச் சீரமைத்து புதிய தாா்ச் சாலை அமைத்து தர வேண்டும் என நெடுமரம் கிராம பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.