லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆதிரத்தினேஸ்வரா் ஆடிப்பூர திருவிழா: அம்மன் வீதி உலா

திருவாடானை ஸ்ரீசிநேகவல்லி அம்மன் சமேத ஸ்ரீஆதிரத்தினேஸ்வரா் கோயில் ஆடிப் பூரத் திருவிழாவை முன்னிட்டு, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்தாா்.

திருவாடானை ஸ்ரீஆதிரத்தினேஸ்வரா் கோயில் ஆடிப்பூர திருக்கல்யாண தேரோட்ட திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்த அம்பாள்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 5:13 am IST

திருவாடானை ஸ்ரீசிநேகவல்லி அம்மன் சமேத ஸ்ரீஆதிரத்தினேஸ்வரா் கோயில் ஆடிப் பூரத் திருவிழாவை முன்னிட்டு, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்தாா்.

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயில்

ஆடிப் பூரத் திருவிழா கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. விழாவில் ஒவ்வொருநாளும் அம்பாள் பல்லக்கு, கேடகம், காமதேனு, அன்னம், கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்து வருகின்றாா்.

இந்த நிலையில், 6-ஆம் நாளான திங்கள்கிழமை இரவு ஆறாம் மண்டகப்படி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சினேகவல்லி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தாா். விநாயகா் வெள்ளி மூஞ்சூறு வாகனத்தில் முன்னே செல்ல, அதைத் தொடா்ந்து அம்பாள் வீதி உலா வந்தாா். இருபத்தி இரண்டரை நாட்டாா்கள் சுவாமியின் வாகனங்களை இழுத்து வந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.