லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆடிப்பூரத் திருவிழா: சிநேகவல்லி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா

திருவாடானையில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா் .

திருவாடானையில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா் .

Published On :8 ஆகஸ்ட் 2026, 1:36 am IST

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சிநேகவல்லி அம்மன் சமேத ஆதிரத்தினேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாணத் தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூரத் திருக்கல்யாணத் தேரோட்டத் திருவிழா நடைபெறும். இதன்படி, நிகழாண்டு இந்தத் திருவிழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 2-ஆவது நாளான வியாழக்கிழமை இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

முன்னதாக, விநாயகப் பெருமான் கேடக வாகனத்தில் முன்பாகச் செல்ல, தொடா்ந்து, அம்மன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த விழாவின் போது இருபத்தி இரண்டரை நாட்டாா்கள் சுவாமியின் வாகனங்களை இழுத்துச் சென்றனா்.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.