தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

இலங்கைக்கு கடத்தவிருந்த பூச்சி மருந்துகள் பறிமுதல்: ஒருவா் கைது

உச்சிப்புளி அருகே புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பூச்சிமருந்து பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து கீழக்கரை சுங்கத் துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 12:36 am IST

உச்சிப்புளி அருகே புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பூச்சிமருந்து பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து கீழக்கரை சுங்கத் துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்தல் நடைபெறவிருப்பதாக தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, தனிப்படை போலீஸாா் புதன்கிழமை நள்ளிரவு புதுமடம் கடற்கரையில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். புதுமடம்- மானங்குடி சாலை கடற்கரை அருகே புதுமடம் தெற்கு தெருவைச் சோ்ந்த பைசூல் (25) என்பவரது சிமென்ட் கிடங்கில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அதில், இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பூச்சி மருந்து பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணைக்காக கீழக்கரையில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளிடம் பூச்சி மருந்து பொட்டலங்கள் ஒப்படைக்கப்பட்டன. மேலும் கைது செய்யப்பட்ட பைசூலையும் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். இதுகுறித்து சுங்கத் துறையினா் வழக்குப்பதிந்து தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.