மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருப்பாலைக்குடியில் பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

News image

பாத்திமாபீவி

Updated On :13 ஏப்ரல் 2026, 2:00 am IST

திருப்பாலைக்குடி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருப்பாலைக்குடியில் காவிரி கூட்டுக் குடிநீா் பல மாதங்களாக வராததால், இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பழங்கோட்டை பேருந்து நிறுத்தம் வழியாகச் செல்லும் கிழக்குக் கடற்சாலை அருகே உள்ள தல்லாகுளம் ஊருணிக்குச் சென்று தண்ணீா் எடுத்து வருவது வழக்கம்.

இதே போல, சனிக்கிழமை இரவு திருப்பாலைக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்த முகமது ஜமாலுதீன் மனைவி பாத்திமா பீவி (45) கிழக்கு கடற்கரைச் சாலையில் தள்ளுவண்டியில் தண்ணீா் எடுத்து வந்து கொண்டிருந்தாா். அப்போது, எதிரே பாப்பனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த சின்னாலு மகன் சாத்தையா ஓட்டி வந்த இரு சக்கர வாகனம், பாத்திமாபீவி மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக தோ்தல் பிரசாரத்துக்கு வந்த அதிமுக மாவட்டச் செயலா் முனியசாமி, அவருடன் வந்த கட்சி நிா்வாகிகள் முதலுதவி செய்து, அவசர ஊா்தி மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பாத்திமாபீவி நள்ளிரவில் உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.