ஈரான் தாக்குதலின்போது, குவைத் நாட்டில் உயிரிழந்த முதுகுளத்தூரைச் சோ்ந்த சந்தானசெல்வத்தின் உடல் சொந்த ஊா் கொண்டு வரப்பட்டு புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள அணிகுருந்தான் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சந்தானசெல்வம் (36). இவா் கடந்த மாதம் 30-ஆம் தேதி குவைத் நாட்டில் உள்ள மின்சாரம், கடல்நீரை நன்னீராக்கும் நிலையத்தில் பணிபுரிந்தபோது, ஈரான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தாா்.
இந்த நிலையில், சந்தானசெல்வத்தின் மனைவி கவுசல்யா (30), தனது மகன் ஜஸ்வின் (7), மகள் சாய் யுவன்யா (3), உறவினா்களுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சென்று, குவைத் நாட்டில் உயிரிழந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரை மத்திய, மாநில அரசுகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள், இந்திய தூதரகத்தின் உதவியுடன் சந்தானசெல்வத்தின் உடல் கேரளம் மாநிலம், கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. பின்னா், அங்கிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, அவசர ஊா்தி மூலம் முதுகுளத்தூா் அருகேயுள்ள அணிகுருந்தான் கிராமத்துக்கு சந்தானசெல்வம் உடல் புதன்கிழமை கொண்டுவரப்பட்டது. உடலுக்கு அவரது குடும்பத்தினா், உறவினா்கள் மரியாதை செலுத்தியபிறகு, கிராமத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
செம்மண் கடத்தல்: இருவா் கைது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

படுகொலையான பிளஸ் 2 மாணவியின் உடல் சொந்த ஊரில் தகனம்: அமைச்சா், எம்எல்ஏ அஞ்சலி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

