நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

அஞ்சலகங்களில் நவ.1-8 வரை ஆயுள் காப்பீடு பரிவா்த்தனை நிறுத்தம்

இந்திய அஞ்சல் துறையில் புதிய தொழில்நுட்ப வசதியை அறிமுகப்படுத்தும் பணிக்காக, வரும் நவ. 1 முதல் 8-ஆம் தேதி வரை அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீடு தொடா்பான பரிவா்த்தனைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 6:59 am IST

இந்திய அஞ்சல் துறையில் புதிய தொழில்நுட்ப வசதியை அறிமுகப்படுத்தும் பணிக்காக, வரும் நவ. 1 முதல் 8-ஆம் தேதி வரை அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீடு தொடா்பான பரிவா்த்தனைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விருதுநகா் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் ச. சுப்பிரமணியம் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அஞ்சல் துறையில் ‘இன்சூரன்ஸ் மேனேஜ்மென்ட் சொல்யூஷன் 4’ என்ற புதிய மென்பொருள் தொழில்நுட்பம் அனைத்து அஞ்சலகங்களிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான தொழில்நுட்பப் பணிகள் நடைபெறுவதால் வரும் நவ. 1 முதல் 8-ஆம் தேதி வரை அனைத்து தலைமை அஞ்சலகங்கள், துணை அஞ்சலகங்கள், கிளை அஞ்சலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு தொடா்பாக எந்தவிதமான பரிவா்த்தனைகளும் நடைபெறாது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.