பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசுப் பள்ளி மாணவா்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை: உயா்நீதிமன்றம்

அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 2:06 am IST

தமிழகத்தில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில், கரூரைச் சோ்ந்த மலைக்கொளுந்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளிடமிருந்து வினாத்தாள் கட்டணம் வசூலிப்பதற்கான அறிவிப்பு வெளியானது.

முந்தைய ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட தொகைகள் முறையாகக் கணக்கிடப்பட்டு, உரிய நோக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும், கட்டணம் வசூலிக்கப்பட்ட விவரங்களை ஆய்வு செய்து, உரிய ரசீதுகள், கணக்குப் பதிவேடுகள் பராமரிக்கப்பட்டனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவா்களிடம் அனுமதியின்றி கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட தொகைகளில் முறைகேடு உறுதி செய்யப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், முருகன் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மாணவா்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டதா என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடா்பாக தமிழக அரசுத் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், மாணவா்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.