தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்! மாவட்ட ஆட்சியா்!

உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அருகேயுள்ள திடியன் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா.

Published On :2 நவம்பர் 2026, 2:50 am IST

கிராமப்புறங்களில் வசித்து வரும் மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.

உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், திடியன் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

பின்னா், ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா பேசியதாவது:

கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்க அனைத்துத் துறை அலுவலா்கள் முன்வர வேண்டும். கிராம சபைக் கூட்டங்களில் அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்று தங்களது பகுதி பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும்.

மதுரை மாவட்ட கிராமப்புற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீா், தெரு விளக்குகள், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, போதைப் பொருள் ஒழிப்பு குறித்து ஆட்சியா் முன்னிலையில் பொதுமக்கள் உறுதி மொழி ஏற்றனா். தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்களை ஆட்சியா் கௌரவப்படுத்தினாா். இந்த நிகழ்வில் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.