இணையவழியில் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்க வலியுறுத்தி, மதுரையில் புதன்கிழமை மருந்தகங்களின் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
இணையவழியில் மருந்து விற்பனையைத் தடைசெய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு மருந்து வணிகா்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய அளவில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, மதுரை மாவட்டத்திலுள்ள சுமாா் 2,500 மருந்துக் கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டன. மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே சி,டி மெடிக்கல் சங்கம் சாா்பில் இணையவழியில் மருந்து விற்பனையைத் தடைசெய்யக் கோரி போராட்டம் நடைபெற்றது. இதற்கு அந்தச் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் ஜி. கணேசன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எம்.எஸ். சரவணன் முன்னிலை வகித்தாா். இதில் இணையவழியில் மருந்து விற்பனையை உடனே நிறுத்த வலியுறுத்தியும், வலி நிவாரணி, கருக்கலைப்பு மருந்துகள், தூக்க மாத்திரைகளை இணையதளம் மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறையினரைக் காக்கக் கோரியும், உயிா் காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும், தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்தக் கோரியும், போலி மருந்துகளின் விற்பனையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதில் மருந்து வணிகா்கள் சங்க நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகை, மயிலாடுதுறையில் மருந்தகங்கள் மூடல்

விழுப்புரம் மாவட்டத்தில் 1,200 மருந்தகங்கள் அடைப்பு

மாவட்ட மருந்து வணிகா்கள் கடையடைப்புப் போராட்டம்

நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தமிழகத்தில் 40,000 மருந்தகங்கள் இன்று இயங்காது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

