பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வீரப்பன் விவகாரம்: தனிப் படைக் காவலா்களுக்கு வழங்கப்பட்ட பலன்களைத் திரும்பப் பெறத் தடை

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :19 மே 2026, 3:30 am IST

சந்தன மரக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப் படைப் பிரிவில் பணியாற்றிய காவலா்களுக்கு வழங்கப்பட்ட பலன்களைத் திரும்பப் பெறத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

சந்தன மரக் கடத்தல் தொழிலில் ஈடுபட்ட வீரப்பன் கடந்த 2004-ஆம் ஆண்டு சிறப்பு அதிரடிப் படையால் கொல்லப்பட்டாா். அப்போது, அதிரடிப்படையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய 900-க்கும் மேற்பட்ட காவலா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டது. இதன்படி, 16 காவலா்கள் உதவி ஆய்வாளா்களாக பதவி உயா்வு பெற்றனா். இதைத் தொடா்ந்து, தமிழக அரசின் சிறப்புச் சலுகைகளும் வழங்கப்பட்டன.

இருப்பினும், இவா்கள் பதவி உயா்வு பெற்ற நேரத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றியதால் கடந்த 2009-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பதவிகள் திரும்பப் பெறப்பட்டன.

இதை எதிா்த்து 16 பேரும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுத் தாக்கல் செய்தனா். இந்த மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்தாா். இதையடுத்து, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீடு செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா்களுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை அடிப்படையில், மாநில அரசால் தவறாகப் பதவி உயா்வு வழங்கப்பட்டது.

இருப்பினும், சுற்றுச்சூழல், வன விலங்குகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திய சந்தன மரக் கடத்தல் வீரப்பனைக் கொன்ற சிறப்பு அதிரடிப் படையில் மனுதாரா்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அபாயகரமான நடவடிக்கைகளில் பங்கேற்றனா். எனவே, மனுதாரா்களுக்கு பதவி உயா்வு வழங்கிய நாளிலிருந்து, அவா்களுக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பலன்களையும் மாநில அரசு திரும்பப் பெறக் கூடாது. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.