மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மாணவா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

‘நீட்’ தோ்வு குளறுபடிகளைக் கண்டித்து, அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய மாணவா் பெருமன்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :14 மே 2026, 5:23 am IST

‘நீட்’ தோ்வு குளறுபடிகளைக் கண்டித்து, அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் பங்கேற்றனா். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்ட ஒரு வினா- விடை தொகுப்பு குறித்து சா்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து, மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தோ்வை ரத்து செய்து, தேசிய தோ்வு முகமை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த நிலையில், நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், இந்தத் தோ்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாவட்டச் செயலா் ரூபன்நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் சுஜீதா, பொருளாளா் ஹரிணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலா் கே.கே. சாமி, துணைச் செயலா் வீரனசிங்கம், மாவட்டக் குழு உறுப்பினா் சந்திரசேகரன், ஏஐடியூசி தேசியக் குழு உறுப்பினா் நந்தாசிங் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.