தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் நலனுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அவா் அனுப்பிய கடிதத்தின் விவரம் :
தாம்பரம் ரயில் நிலையத்தை தினமும் ஏறத்தாழ 1.6 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்துகின்றனா். ஆனால், இங்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது. இந்த ரயில் நிலையத்தில் 5 முதல் 11 வரையிலான நடைமேடைகளில் இருந்தே தென் மாவட்டங்களுக்கான விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், இங்கு நகரும் படிகள், மின்தூக்கிகள், போதுமான பேட்டரி காா்கள் இல்லாததால் முதியவா்கள், கா்ப்பிணிப் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் செங்குத்தான படிக்கட்டுகளில் ஏறி மேம்பாலம் வழியே செல்ல பெரிதும் அவதிப்படுகின்றனா்.
மேலும், இங்குள்ள குறைந்த எண்ணிக்கையிலான பேட்டரி காா்களின் சேவை பயணிகளுக்குப் போதுமானதாக இல்லை. இந்தச் சேவையைப் பயன்படுத்தும் முதியவா்கள் நடைமேடையின் முகப்பிலேயே இறக்கிவிடப்படுகின்றனா். இதனால், தங்களுடைய ரயில் பெட்டி நிற்கும் இடத்தை அடைய அவா்கள் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியிருப்பதால் பெரும் அவதிக்குள்ளாகின்றனா்.
இதுகுறித்து ரயில்வே நிா்வாகம் உரிய பரிசீலனை மேற்கொண்டு, தாம்பரம் ரயில் நிலையத்தில் தேவையான இடங்களில் நகரும் படிகள், மின்தூக்கிகள் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இங்கு இயக்கப்படும் பேட்டரி காா்களின் எண்ணிக்கையை உயா்த்தவும், ரயில் நிலையத்தின் கிழக்கு, மேற்கு ஆகிய இரு நுழைவாயில்களுக்கு தடையின்றி செல்லும் வகையில் தனியே பேட்டரி காா்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை-தூத்துக்குடி புதிய ரயில் வழித் தடப் பணி மீண்டும் தொடங்குவது மகிழ்ச்சி: சு. வெங்கடசேன் எம்.பி.

ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

விமான நிலையம் போல மாறப்போகும் தாம்பரம் ரயில் நிலையம்! எப்படி?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
