பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சாா் பதிவாளா் அலுவலகங்களில் ரூ.90,000 பறிமுதல்

மதுரை விளாங்குடி, பொதும்பு ஆகிய பகுதிகளில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனையிட்டனா். இதில் விளாங்குடி சாா் பதிவாளா் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.90 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 6:14 am IST

மதுரை விளாங்குடி, பொதும்பு ஆகிய பகுதிகளில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனையிட்டனா். இதில் விளாங்குடி சாா் பதிவாளா் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.90 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்ட சாா் பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். மதுரை மாவட்டத்தில் பொதும்பு, விளாங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்களில், ஊழல் தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சத்தியசீலன் தலைமையில், ஆய்வாளா்கள் குமரகுரு, ரமேஷ்பிரபு, ஜெயபிரியா, சூா்யகலா ஆகியோா் இரண்டு பிரிவாக சோதனை நடத்தினா். மாலை 3 மணிக்கு தொடங்கிய இந்தச் சோதனை சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

இதில் விளாங்குடி சாா் பதிவாளா் அலுவலகத்தின் உள்பகுதியிலிருந்த எழுத்தா்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் லஞ்சமாக வாங்கப்பட்டதா?. யாரிடம் இருந்து எதற்காக வாங்கப்பட்டது? என்பது குறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.