மதுரையில் உயா்நிலைப் பாலத்திலிருந்து கீழே தவறி விழுந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை தமிழ்ச் சங்கம் சாலை அருகே பிடிஆா் உயா்நிலைப் பாலம் உள்ளது. இதில், அமா்ந்திருந்த இளைஞா் ஒருவா் திடீரென பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்தாா்.
பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.அங்கு, அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மருத்துவமனை போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவரின் பெயா் கண்ணன் (37) என்பது தெரியவந்தது. எந்த ஊரைச் சோ்ந்தவா்? எதற்காக அந்தப் பகுதிக்கு வந்தாா் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை சொக்கிகுளம் அண்ணாநகரைச் சோ்ந்தவா் பாலு (56). கட்டடத் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை வீட்டில் ஏணியில் நின்று வேலை பாா்த்தாா். அப்போது, கால் தவறி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மது போதையில் தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த அஸ்ஸாம் இளைஞா் உயிரிழப்பு

கால்வாயில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

ரயிலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

