கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கோயில் நிலத்துக்கு மேம்பாட்டுக் கட்டணம் வசூலித்த விவகாரம்: நில நிா்வாகத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

கோயில் நிலத்துக்கு மேம்பாட்டுக் கட்டணம் பிடித்தம் செய்தததை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு, நில நிா்வாகத் துறையின் முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image

உத்தரவு - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 1:29 am IST

கோயில் நிலத்துக்கு மேம்பாட்டுக் கட்டணம் பிடித்தம் செய்தததை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு, நில நிா்வாகத் துறையின் முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை யா. ஒத்தக்கடை கோதண்டராமசுவாமி கோயில் தக்காா் தாக்கல் செய்த மனு:

கோதண்டராமசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலம் உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு எதிரே நரசிங்கம் கிராமத்தில் உள்ளது. இதில், 6.51 ஏக்கா் நிலத்தை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் விரிவாக்கப் பணிக்காக கையகப்படுத்த தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இதற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.26.45 கோடி அரசு நிா்ணயித்தது. இதில்,நில மேம்பாட்டுக் கட்டணம் என்ற பெயரில் ரூ.8.81 கோடி பிடித்தம் செய்யப்பட்டது. எஞ்சியுள்ள தொகையான ரூ.17. 63 கோடியை கோயில் நிா்வாகத்தின் பெயரில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், கோயில் நிலத்துக்கு மேம்பாட்டுக் கட்டணம் பிடித்தம் செய்தது ஏற்புடையது அல்ல. பிடித்தம் செய்த தொகையை, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிய தேதியிலிருந்து வட்டியுடன் சோ்த்து கோயில் நிா்வாகத்துக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், எம்.ஜோதிராமன் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் முன்னிலையாகி, கோயில் நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு நில மேம்பாட்டுக் கட்டணம் விதித்தது சட்டப்படி ஏற்புடையதல்ல. அதை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனு குறித்து நில நிா்வாகத் துறை முதன்மைச் செயலா், மதுரை மாவட்ட ஆட்சியா், நிலம் கையகப்படுத்தும் அலுவலா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.