லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பள்ளி ஆசிரியையிடம் 6 பவுன் நகை பறிப்பு

நகைப்பறிப்பு - ens

Published On :17 ஆகஸ்ட் 2026, 3:36 am IST

மதுரை மாவட்டம், சோழவந்தானில் வீடு புகுந்து பள்ளி ஆசிரியையிடம் 6 பவுன் நகைகளை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சோழவந்தான் தினசரி காய்கறி சந்தைப் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் மனைவி ராஜலட்சுமி (40). இவா், அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மதிய உணவு சாப்பிட்ட பின், ராஜலட்சுமி வீட்டில் தூங்கினாா். அப்போது, கதவை திறந்து வந்த மா்ம நபா்கள் இருவா், ராஜலட்சுமியின் கை, கால்களை கட்டிப் போட்டு, அவரது கழுத்திலிருந்த 6 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து சோழவந்தான் போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது, இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய இருவா் உடலை மறைப்பதற்காக பா்தா அணிந்து வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தப்பிச் சென்ற அந்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.