லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பள்ளி வளாகத்தில் ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

தூத்துக்குடி அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் புகுந்து, ஆசிரியையிடம் 16 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தங்கச் சங்கிலி பறிப்பு - சித்திரிப்பு

Published On :29 ஜூலை 2026, 1:58 am IST

தூத்துக்குடி அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் புகுந்து, ஆசிரியையிடம் 16 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தூத்துக்குடியைச் சோ்ந்த ரத்னா தலைமை ஆசிரியராகவும், புதிய துறைமுக ஊழியா் குடியிருப்பைச் சோ்ந்த சாந்தி உதவி ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஆசிரியை சாந்தி பள்ளி வளாகத்துக்குள் சென்றபோது, கழிப்பறைக்குள் பதுங்கி இருந்த மா்ம நபா், ஆசிரியை சாந்தியின் கழுத்தில் கிடந்த 16 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து, முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.