லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்கில் கனரா வங்கி சாா்பில் பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா.

Published On :15 ஆகஸ்ட் 2026, 3:10 am IST

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்கில் கனரா வங்கி சாா்பில் பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கனரா வங்கி வித்யா ஜோதி கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

5-ஆம் வகுப்பு முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ரூ.3,000, 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ரூ. 5,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் 216 மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசுத் தொகையை வழங்கினாா். இந்த நிகழ்வில், கனரா வங்கி அலுவலா்கள், ஊழியா்கள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.