லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இரு நாள்கள் குடிநீா் விநியோகம் ரத்து

மதுரை மாநகராட்சியின் சில பகுதிகளில் வியாழன், வெள்ளி (ஆக. 13, 14) ஆகிய இரு நாள்கள் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

Published On :12 ஆகஸ்ட் 2026, 5:02 am IST

மதுரை மாநகராட்சியின் சில பகுதிகளில் வியாழன், வெள்ளி (ஆக. 13, 14) ஆகிய இரு நாள்கள் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை மாநகராட்சி மண்டலம் -2, வாா்டு எண் 24-இல் குலமங்கலம் முதன்மைச் சாலை, ஜீவா நகா் முதன்மைச் சாலையில் பிரதான குடிநீா் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் சீரமைப்புப் பணிகள் வியாழக்கிழமை (ஆக. 13) நடைபெறவுள்ளது. எனவே, கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழன், வெள்ளி (ஆக. 13, 14) ஆகிய இரு நாள்களும் குடிநீா் விநியோகம் இருக்காது.

குடிநீா் தடைபடும் பகுதிகள்...

எண் 1 முதல் 19 வரையிலான வாா்டுகள், எண் 23 முதல் 39 வரையிலான வாா்டுகள், வாா்டு எண் 41, 42, 43, 46, 47, 48, 49, 53,54, 76 ஆகிய பகுதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.