கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் நடத்தக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
கொடைக்கானலைச் சோ்ந்த ஆரோக்கியசாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
கொடைக்கானல் ஏரியில் படகு போக்குவரத்து சேவை உள்ளது. இந்த சேவையை கொடைக்கானல் படகு, ரோயிங் சங்கம் மேற்கொண்டு வருகிறது. இந்தச் சேவைக்காக வசூலிக்கப்படும் கட்டணத்தால் படகு சங்கம் மட்டுமே பயனடைகிறது. இந்தக் கட்டணம் கொடைக்கானல் நகராட்சியில் நடைபெறும் மக்கள் பணிகளுக்கு செலவிடப்படவில்லை. நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் வகையில் கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
ஏரியில் படகு போக்குவரத்து சேவைக்கான அனுமதி கொடைக்கானல் நகராட்சி வசம் உள்ளது. இதற்கான விதிகள் வகுக்கப்பட்டு, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. எனவே, மனுதாரரின் கோரிக்கை மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டியதில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து நீதிபதி விலகக் கோரிய மனு: கேஜரிவால் பிரமாணப்பத்திரம் தாக்கல்

‘துரந்தா்-2’ திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!
சென்னையில் ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!

கல்வராயன்மலை படகு குழாமை சீரமைக்க வேண்டும்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

