பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியவா் கைது

திருமணமான பெண்ணுக்கு கட்செவி அஞ்சலில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியவரை காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பிரதிப் படம்

Published On :1 நவம்பர் 2026, 4:35 am IST

செம்பட்டி அருகே திருமணமான பெண்ணுக்கு கட்செவி அஞ்சலில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியவரை காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். 

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள கேத்தையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த திருமணம் ஆன 30 வயது பெண்ணின் கட்செவி அஞ்சல் எண்ணுக்கு அடிக்கடி ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபரை அந்தப் பெண்ணும், அவரது சகோதரரும் வெள்ளிக்கிழமை செம்பட்டி நான்கு சாலை பகுதிக்கு வரவழைத்து கண்டித்தனா்.

இதில் இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. மேலும், கொலை மிரட்டல் விடுத்த அந்த இளைஞா் மீது பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த மனோபாலாவைக் (35) கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.