நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

பொதுப் பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பாசன விவசாயிகள்

குடகனாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரை அகற்றக் கோரி, பழனியிலுள்ள பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தை குடகனாறு பாசன விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

பழனி பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட குடகனாறு நீா்த்தேக்கப் பாசன விவசாயிகள்.

Published On :28 அக்டோபர் 2026, 4:30 am IST

குடகனாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரை அகற்றக் கோரி, பழனியிலுள்ள பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தை குடகனாறு பாசன விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டம், காமராஜா் நீா்த்தேக்கத்துக்கு மேலே கன்னிமாா் கோயில் அருகே குடகனாற்றின் குறுக்கே சுமாா் 7 அடி உயரம், 30 அடி அகலம், 150 அடி நீளத்தில் தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டுள்ளது.

உரிய அனுமதியின்றி குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரால் ஆற்றில் நீரோட்டம் தடைபடுவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

இந்த சுவரால் குடகனாற்றின் கீழ்ப் பகுதியில் உள்ள அணைக்கட்டுகள் மூலம் பயனடையும் சுமாா் 50 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள், லட்சக்கணக்கான மக்களின் குடிநீா் ஆதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பலமுறை பொதுப் பணித் துறை அலுவலகத்தில் மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், பொதுப் பணித் துறை அதிகாரிகளைக் கண்டித்து, குடகனாறு பாசன விவசாயிகள் செவ்வாய்க்கிழமை பழனியிலுள்ள பொதுப் பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.