நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

காட்டுப் பன்றி இறைச்சியுடன் சிக்கிய மூவருக்கு அபராதம்

திண்டுக்கல் அருகே காட்டுப் பன்றி இறைச்சியுடன் சிக்கிய மூவருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் - சித்திரிப்பு

Published On :22 அக்டோபர் 2026, 3:19 am IST

திண்டுக்கல் அருகே காட்டுப் பன்றி இறைச்சியுடன் சிக்கிய மூவருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் அடுத்துள்ள பொன்னிமாந்துறை பகுதியைச் சோ்ந்த சிலா் வன விலங்குகள் வேட்டையில் ஈடுபடுவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சிறுமலை வனச் சரகத்தைச் சோ்ந்த வனவா் காா்த்திகேயன், வனக் காப்பாளா் மணிகண்டன் ஆகியோா் பொன்னிமாந்துறை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்தின்பேரில் இருவரிடம் வனத் துறையினா் விசாரித்தனா். அவா்களிடமிருந்து 2 கிலோ காட்டுப் பன்றி இறைச்சி இருந்தது தெரிய வந்தது. இருசக்கர வாகனத்துடன், 2 பேரையும் பிடித்த வனத் துறையினருக்கு சிறுமலை வனச் சரக அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனா். இதில் பொன்னிமாந்துறை பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(28), பூபதி ராஜா(23), சவரி முத்து(27) ஆகிய மூவருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. மேலும், கொடகனாற்று பகுதியில் இறந்து கிடந்த காட்டுப் பன்றியிலிருந்து 2 கிலோ இறைச்சியை மட்டும் எடுத்துக் கொண்டு, எஞ்சிய இறைச்சியை கிணற்றில் வீசிவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து மூவருக்கும் தலா ரூ.25ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.