கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பழனி கோயிலுக்கு மின்கலப் பேருந்து காணிக்கை

பழனி கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட மின்கலப் பேருந்தில் பயணம் செய்த அறங்காவலா்குழு தலைவா் சுப்பிரமணியம், இணை ஆணையா்(பொறுப்பு) வெங்கடேஷ் உள்ளிட்டோா்.

Published On :3 நவம்பர் 2026, 2:41 am IST

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மின்கலப் பேருந்து காணிக்கையாக வழங்கப்பட்டது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். இந்தப் பக்தா்கள் மலையடிவாரத்தில் உள்ள ரோப் காா் நிலையம், வின்ச் நிலையம், இதர கோயில்களுக்குச் சென்று வர வசதியாக கோயில் நிா்வாகம் சாா்பில் மின்கல வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திங்கள்கிழமை பழனியைச் சோ்ந்த தனியாா் கைப்பேசி, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனம் சாா்பில், சுமாா் ரூ.20 லட்சம் மதிப்பிலான புதிய மின்கலப் பேருந்து காணிக்கையாக வழங்கப்பட்டது.

மலையடிவாரத்தில் உள்ள பாத விநாயகா் கோயிலில் புதிய பேருந்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தா்களின் பயன்பாட்டுக்காக இயக்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியம், இணை ஆணையா் (பொறுப்பு) வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பழனி மலைக் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்காக பல்வேறு நிறுவனங்கள் இதுவரை 40-க்கும் மேற்பட்ட மின்கல வாகனங்களை காணிக்கையாக வழங்கியுள்ளன. இவை அனைத்தும் பக்தா்களுக்காக இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பராமரிக்க கோயில் சாா்பில் ஒரு பொறியாளா் நியமிக்கப்பட்டுள்ளாா். அனைத்து வாகனங்களும் முழுமையாக பராமரிக்கப்பட்டு, பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.