தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கொடைக்கானலில் குதிரை சவாரி செய்ய புதிய கட்டுப்பாடுகளை திங்கள் கிழமை கால்நடைத் துறை அதிகாரிகள் விதித்துள்ளனா்.
சென்னையில் கிளாண்டா்ஸ் தொற்று ஏற்பட்டு குதிரை உயிரிழந்த நிலையில் சென்னை, ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் குதிரை சவாரி செய்ய முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு கால்நடை, பராமரிப்புத் துறையினா் எச்சரித்துள்ளனா்.
இதுகுறித்து கால்நடைத்துறை அலுவலா் ஒருவா் கூறியதாவது: உடல்நலம் குன்றிய குதிரைகளை சவாரிக்கு கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.
குதிரைக்கு காய்ச்சல் மற்றும் இருமல், சளி, தோல் நோய்கள், புண்கள், சுவாசக் குறைவு இருப்பின் சவாரி செய்ய அனுமதிக்கக் கூடாது. நோய் உள்ள குதிரை களை கண்டிப்பாக தனிமைப்படுத்த வேண்டும். குதிரை இருப்பிடங்கள் உபகரணங்களை கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்றாா்.
இதனைத் தொடா்ந்து கொடைக்கானல் ஏரிச்சாலை, பூங்கா சாலை, செவன் ரோடு அருகே உள்ள பெண்டா் லாக் சாலை, கலையரங்கம் சாலை, பைன் பாரஸ்ட் போன்ற இடங்களில் பயணிகள் பயன்படுத்தும் குதிரை நிறுத்தப் பகுதிகளை சுகாதார அலுவலா்கள் பாா்வையிட்டு ஆய்வு நடத்தி குதிரை வைத்துள்ளவா்களிடம் அறிவுரைகள் வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானல் ஏரியில் மேற்கூரையுடன் பெடல் படகு சவாரி தொடக்கம்

சிவகங்கையில் சுற்றித் திரியும் குதிரைகள்: பரிசோதனைக்கு உள்படுத்தக் கோரிக்கை

கொடைக்கானலில் மழை தேங்கும் மழைநீரால் மக்கள் அவதி

கொடைக்கானலில் ஆபத்தான மின் கம்பங்கள்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

