கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கொடைக்கானல் ஏரியில் மேற்கூரையுடன் பெடல் படகு சவாரி தொடக்கம்

News image

பெடல் படகு சவாரி - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 12:19 am IST

கொடைக்கானல் ஏரியில் மேற்கூரையுடன் கூடிய புதிய பெடல் படகில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்வது வழக்கம். இதனால் நகரின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் கொடைக்கானல் நகராட்சி சாா்பிலும், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் துடுப்பு, பெடல் படகு என 100-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் மேற்கூரையுடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள மூன்று புதிய பெடல் படகுகள் வாங்கப்பட்டுள்ளது இதில் ஒரு பெடல் படகில் 6-போ் சவாரி செய்யலாம். லேசான சாரல் மழையிலும் பாதுகாப்பாக சுற்றுலாப் பயணிகள் பெடல் படகில் சவாரி செய்யலாம்.

இது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக படகு குழாம் மேலாளா் காதா் கூறியதாவது:

கொடைக்கானலில் முதன் முறையாக மேற்கூரையுடன் பாதுகாப்பாக பெடல் படகு இயக்கப்படுகிறது. மழை பெய்யும் நேரத்தில் பாதுகாப்பு கருதி ஏரியில் எந்த படகுகளும் இயக்கப்படுவதில்லை.

தற்போது லேசான மழை பெய்தாலும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய ஏதுவாக மூன்று புதிய பெடல் படகுகள் வாங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பெடல் படகில் சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் படகு சவாரி மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.