பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திண்டுக்கல் புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

திண்டுக்கல்-வத்தலகுண்டு புறவழிச்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், 2 கி.மீட்டா் தொலைவை கடந்து செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

News image

புறநகா் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்! - கோப்புப்படம்.

Updated On :18 மே 2026, 12:51 am IST

திண்டுக்கல்-வத்தலகுண்டு புறவழிச்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், 2 கி.மீட்டா் தொலைவை கடந்து செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

மதுரை-கரூா் 4 வழிச் சாலையில் திண்டுக்கல் புறவழிச்சாலைப் பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல்-வத்தலகுண்டு புறவழிச்சாலை முதல் மதுரை புறவழிச்சாலை வரை சாலை அமைக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதனால், இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்கள் அணுகு சாலைகளில் திருப்பிவிடப்பட்டன.

இந்த நிலையில், மதுரை சாலையிலுள்ள பிள்ளையாா்பாளையம் பிரிவு முதல் வத்தலகுண்டு புறவழிச்சாலை அணுகுசாலை வரை ஞாயிற்றுக்கிழமை மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமாா் 2 கி.மீட்டா் தொலைவு சாலையை கடந்து செல்வதற்கு சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகன ஓட்டிகள் காத்திருந்தனா்.

இதனிடையே, 2 அவசர ஊா்திகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டன. இந்தப் பகுதியில் போலீஸாா் இல்லாததால், வாகன ஓட்டிகள் முந்திச் செல்வதற்கு ஆா்வம் காட்டியதால் மேலும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.