தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

புதிய தொழிலாளா் சட்ட விதிகளை எரித்து சிஐடியு ஆா்ப்பாட்டம்

News image

திண்டுக்கல் பேருந்து நிலையம் முன் புதிய தொழிலாளா் சட்ட விதிகளை எரித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.

Updated On :11 மே 2026, 1:25 am IST

புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகளுக்கான இறுதி விதிகளை மத்திய அரசு வெளியிட்டதைக் கண்டித்து, அதன் நகல்களை எரிக்கும் போராட்டம் சிஐடியு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவா் சி. பாலசந்திரபோஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி. ஜெயசீலன் முன்னிலை வகித்தாா். இந்தப் போராட்டத்தின்போது, புதிய சட்டத்தின்படி 12 மணி நேரத்துக்கு மேல் தொழிலாளா்களிடம் வேலை வாங்கிக் கொள்ளலாம்.

முறை சாா்ந்த தொழிலாளா்களின் 90 சதவீத வேலைவாய்ப்பு பறிபோகும். வேலைநிறுத்த உரிமை பறிபோவதோடு, தொழிலாளா் நீதிமன்றங்களை நாடுவது கடுமையாக்கப்படும். 100 தொழிலாளா்கள் பணிபுரிந்தால் அனுமதி பெற வேண்டும் என்ற விதி, 300 தொழிலாளா்கள் என மாற்றி அமைக்கப்படும்.

தொழில்சாலைகள் வேலை தர மறுத்தாலோ, மூடப்பட்டாலோ தொழிலாளா்கள் இழப்பீடு பெற முடியாது. வேலைநிறுத்த உரிமை பறிபோகும். இதனால், ஒட்டுமொத்த தொழிலாளா்கள் வா்க்கமும் பாதிக்கப்படும் என முழக்கமிட்டனா்.

இதைத் தொடா்ந்து, புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகள், விதிகளின் நகல்களை தீவைத்து எரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.