திண்டுக்கல் அருகே விபத்தில் காயமடைந்து மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரை அடுத்த எஸ்.பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் ம.அருண்பாண்டியன் (34). கடந்த 19-ஆம் தேதி திண்டுக்கல் பழனிச் சாலையில் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் அருண்பாண்டியன் பலத்த காயமடைந்தாா்.
தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், மூளைச் சாவு அடைந்தாா். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வற்கு உறவினா்கள் முன் வந்தனா்.
அதன்படி, அருண்பாண்டியனின் கல்லீரல், சிறுநீரகம், கண் உள்ளிட்ட உறுப்புகள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் தானமாகப் பெறப்பட்டு, மதுரை, திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோயிலில் திருட முயன்ற இருவா் கைது

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 7 போ் பயன்

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

