ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திமுக பிரமுகா் வீடு அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை

News image

கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 2:05 am IST

பழனி அருகே திமுக பிரமுகரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி வட்டாரத்துக்குள்பட்ட புஷ்பத்தூரை அடுத்த வயலூரைச் சோ்ந்தவா் மகுடீஸ்வரன். திமுக பொதுக் குழு உறுப்பினரான இவா் வயலூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், மதுரையிலிருந்து 2 காா்களில் வந்த வருமான வரித் துறை அதிகாரிகள், மகுடீஸ்வரனுக்கு சொந்தமான வீடு, நிதி நிறுவன அலுவலகத்தில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையின்போது, முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சோதனையை முடித்துக் கொண்டு, இரவு 11 மணிக்கு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

பாஜக முன்னாள் நிா்வாகியான மகுடீஸ்வரன், அங்கன்வாடி ஊழியா் அளித்த பாலியல் புகாரின் பேரில், கடந்த ஓராண்டுக்கு முன்பு கைது செய்யப்பட்டாா். சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், அமைச்சா் அர.சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.

இதையடுத்து, திமுக பொதுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டாா். இதனிடையே, கடந்த சில நாள்களாக திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவா் கனகராஜ், திமுக பொதுக் குழு உறுப்பினா் மகுடீஸ்வரன் இடையே சமூக ஊடகங்களில் கருத்து மோதல் ஏற்பட்டது.

இதன் எதிரொலியாகவே, தனது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரி வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பதாகவும், இதற்கு பாஜகவினரின் தூண்டுதலே காரணம் என்றும் மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.