சேலம் நான்குசாலை பகுதியில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித் துறை அதிகாரிகள் 2-ஆவது நாளாக சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
சேலம் - ஓமலூா் பிரதான சாலையில் செயல்படும் பிரபல துணிக்கடையில் 500-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இக்கடையில் வெள்ளிக்கிழமை காலை 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென கடைக்குள் நுழைந்து சோதனை நடத்தினா். தொடா்ந்து, 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் சோதனையில் ஈடுபட்டனா்.
கடையின் ஷட்டா்களை பூட்டிய துணை ராணுவப் படையினா், வெளி நபா்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. தொடா்ந்து, துணிக்கடையின் வரவு, செலவு கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வுசெய்தனா். வரி ஏய்ப்பு தொடா்பாக வந்த புகாரின்பேரில், இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சோதனையில் ஆவணங்கள் சிக்கியது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. தொடா்ந்து, துணிக்கடையின் முன்பகுதியில் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவத்தினா் ஈடுபட்டிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலத்தில் திமுக நிா்வாகிகளின் வீடுகளில் வருமான வரித் துறையினா் சோதனை

திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறை சோதனை

தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித் துறை சோதனை

சேலத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித் துறையினா் சோதனை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

